2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திங்கள் முதல் சந்தை

Editorial   / 2020 மே 28 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்துப் பொதுச் சந்தைகளும் மக்கள் பாவனைக்காக, எதிர்வரும் திங்கட்கிழமை (01) திறக்கப்படும் என, யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக, இன்று (28) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தின் இயல்புநிலை, படிப்படியாக திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், பொதுச் சந்தைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக ஆளுநரும் சில பணிப்புரைகளையும் அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

இதன் பிரகாரம், முக்கியமான சந்தைகள் அமைந்துள்ள பிரதேச சபையினர், உள்ளூராட்சி சபை அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில், தத்தமது தொகுதிகளில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சந்தைகளை மீள் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சந்தைகள் திறக்கப்பட்டாலும் அனைத்துச் சந்தைகளும் கண்காணிப்புக் கீழுயே இயங்கும் என்றும் சந்தைக்கு வரும் பொதுமக்கள், சமூக இடைவெளியைப் பேணுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X