2025 மே 09, வெள்ளிக்கிழமை

திருட்டு: இளைஞர்கள் இருவர் கைது

Niroshini   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நல்லூர் பிரதேசத்தில் வீடுகளில் நீர் பம்பி மோட்டர்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட வீட்டுப் பாவனைப் பொருள்களை திருடி வந்த நல்லூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர்கள் இருவர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் திருட்டு பொருள்களான 15 மின்விசிறிகள், 2 நீர் பம்பி மோட்டர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ரைஸ் குக்கர் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேசத்தில் உள்ள வீடுகளில், குடியிருப்பார்கள் இல்லாத வேளையில் திருட்டுச் சம்பவம் அதிகரித்து வந்த நிலையில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையிலேயே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X