2025 மே 01, வியாழக்கிழமை

திருட்டு குற்றத்தில் யாழில் ஒருவர் கைது

Princiya Dixci   / 2022 மே 24 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த், வி.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வருட காலத்தில் 6 வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த 36 வயது நபரே, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்படி  நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, 2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 6 வீடுகளில் தான் தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியனவற்றை திருடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒரு தொகை நகை மற்றும் பணம் ஆகியனமீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .