Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். திருநெல்வேலியுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்ட ஒன்பது பேர் கண்ணில் கிருமித் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை காலை கண் புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்போது ஏற்பட்ட கிருமி தொற்றினாலேயே அன்றைய தினம் சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கபபட்டவர் ஒருவர் தெரிவிக்கையில்,
“பிரபல கண் வைத்திய நிபுணரால், எமக்கு கடந்த சனிக்கிழமை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக வருமாறு கூறினார்கள். அதன் படி மறுநாளும் சத்திர சிகிச்சைக்குப் பின்னரான சிகிச்சைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன்.
அன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு நித்திரையின் பின்னர் மறுநாள் திங்கட்கிழமை காலை கண்ணில் வலி ஏற்பட்டது. சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்படும் சாதாரண வலியாக இருக்கும் என அதனை பெரிது படுத்தவில்லை. அன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை சத்திர சிகிச்சை செய்த தனியார் வைத்தியசாலையிலிருந்து தொலைபேசி மூலம் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி கண்ணில் வலி உள்ளதா என வினாவினார்கள். நான் அதற்கு ஆம் என பதில் சொன்னதும் உடனடியாக வைத்தியசாலைக்கு வருமாறு கூறினார்கள்.
அதனையடுத்து நான் அங்கு சென்றபோது, என்னுடன் சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களும் அங்கு வந்து இருந்தார்கள். எமக்கு தனியார் வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பின்னர் திங்கட்கிழமை இரவு எம்மை மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எமக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக, கண்ணில் ஏற்பட்ட கிருமித் தொற்றுக்காவே தற்போது எமக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது. தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக 60 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையில் பணத்தை செலவு செய்து உள்ளோம். தற்போது யாழ். போதனா வைத்திய சாலை கண் சிகிச்சை விடுதியில் தங்கி சிகிச்சை பெறுகின்றோம்” எனக் கூறினார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியிடம் வினவியபோது,
“தனியார் வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின்போது ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட ஏழு ஆண்களும் இரண்டு பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அவர்களிலொருவர் வவுனியாவிலிருந்து சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட அனைவரும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.
கிருமித் தொற்று தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை நுண்ணுயிரியல் பிரிவு மற்றும் வைத்திய நிபுணர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்கள். மாதிரிகளை கொழும்புக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். தொற்றுக்கான காரணம் பரிசோதனை முடிவின் பின்னரே தெரிய வரும்.
தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதியளவான சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் குணமடைந்து விடுவார்கள்” எனக் கூறினார்.
15 minute ago
56 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
56 minute ago
2 hours ago
4 hours ago