2025 மே 01, வியாழக்கிழமை

’தீர்வு இல்லையேல் வீதிக்கு இறங்குவோம்’

Niroshini   / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-டி.விஜித்தா

கடந்த பல வருடங்களாக தமது இடமாற்றம் தொடர்பில் பல போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகத்  தெரிவித்த யாழ்ப்பாணத்தின் அதிகஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள், தமக்கான தீர்வுகள் எட்டப்படவில்லையாயின், வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.

தமக்கு இடமாற்றம் வழங்க கோரி, யாழ்ப்பாணத்தின் அதிகஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களால், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால், நேற்று  (04), கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, ஆசிரியர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்துரைத்த ஆசிரியர்கள், அதிகஷ்டப் பிரதேசங்களில், 3 வருடங்கள் கடமையாற்றினால் போதும் என்றவர்கள் இன்று, 6 வருடங்கள் கடந்தும் தமக்கான இடமாற்றங்கள் வழங்கவில்லையெனச் சாடினர்.

'தற்போதுள்ள வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவனை சந்தித்த போது, கொரோனா சூழ்நிலை காரணமாக, பாடசாலைகள் இயங்காத நிலை காணப்பட்டதாகவும், தற்போது ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால், இடமாற்றம் தொடர்பில் ஆராய்ந்து, ஆளணிகள் இல்லாத பிரதேசங்களில் மாற்றுவதாக தெரிவித்துள்ளார்' எனவும், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .