2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

‘தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்’

Editorial   / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமது உறவுகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை” என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில்  கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம்,  இன்றும் (09)  முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக 276ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்த,  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் போராட்டத்துக்கு எந்தவித பதில்களும் கிடைக்காத நிலையில், அடை மழைக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அரசாங்கத்தால் தமக்கு எந்தத் தீர்வும் வழங்கமுடியவில்லை எனவும் சர்வதேச விசாரணையே தமக்கு தேவை எனவும் உறவுகள் தெரிவித்திருந்தனர்.  

இந்நிலையில், இன்று முல்லைத்தீவு மாவட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களை நியூயோர்க் தலைமையகமாக கொண்டியங்கும்  நிலைமாறு கால நீதிக்கான அமைப்பின் பிரதிநிதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் தேவை இல்லை என்பதையும் காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் எதையும் முறையிடவில்லை என்றும் பன்னாடுகளுக்கே முறையிடவுள்ளதாகவும், காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .