Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 05 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளான வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு ஆகிய மூன்று பிரதேசங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்றை நடாத்துவதுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டே மூன்று பிரசேச செயலர் பிரிவையும் உள்ளடக்கியதாக வேலணைப் பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடாத்தப்பட உள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்தில் நேற்று(04) நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக் கூட்த்தின் போது தீவுப் பகுதிகளான நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை ஆகி மூன்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கல்வி, சுகாதாரம், வீதி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டன.
இதில் அங்குள்ள தேவைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள பிரச்சனைகள் தேவைகள் அதிகளவில் இருப்பதாகவும் இந்த மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கியதான தனியானதொரு கூட்டத்தைக் நடாத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இணைத்தலைவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக் கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலித்த இணைத் தலைவர்கள் அவ்வாறானதொரு கூட்டத்தை வேலணைப் பிரதேச செயலகத்தில் நடாத்துவதெனவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025