2025 மே 02, வெள்ளிக்கிழமை

துன்னாலையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு: பெண் காயம்

Niroshini   / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில், இன்று (14) காலை 5.30 மணியளவில், எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதில், பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ. பௌநந்தி என்பவரின் வீட்டிலையே, இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது. 

வழமை போன்று, இன்றைய தினம் காலையில், விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது, எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளது.

இதன்போது, வெடித்து சிதறிய அடுப்பின் பாகம் ஒன்று விரிவுரையாளரின் மனைவியின் தலையில் பட்டதில் அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

இதேவேளை, அடுப்பு வெடித்து சிதறிய அதிர்வில், சமயலறையின் சீலிங் சீட்டும் (கூரை தகடும்) வெடித்துள்ளது. 

எரிவாயு சிலிண்டரை, நேற்றைய தினமே (13), மாற்றி இருந்ததாக, விரிவுரையாளர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X