2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

துன்னாலை மோதல் சம்பவம் : மேலும் ஒருவர் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

துன்னாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென, நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர், துன்னாலைப் பகுதியில் வைத்து, நேற்று (29) இரவு கைதுசெய்யப்பட்டாரென, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர், பறையாண்குள பகுதியைச் சேர்ந்தவர் என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இதற்கு முன்னர் 54 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர், அரச சொத்துக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு ஓகஸ்ட் 9ஆம் திகதி, பருத்தித்துறை – மணற்காடு, ஆறாம் கட்டை பகுதியில், மணல் ஏற்றிச்சென்ற கன்டர் வாகனம் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில், பொலிஸ் காவலரண் தாக்கப்பட்டதுடன், டயர்கள் எரிக்கப்பட்டன.

இந்தச் சம்பவங்களைக் கருத்திற்கொண்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 54 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .