Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் வைத்து, நேற்று (10) துப்பாக்கி, வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, உள்ளூர் தயாரிப்பு (கட்டுத்துவக்கு/ இடியன்) துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டன.
அவ்விளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் எட்டு இளைஞர்களை கைது செய்த பொலிஸார், அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், விடுவித்துள்ளனர்.
இதேவேளை முன்னதாக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
3 hours ago