2025 ஜூலை 16, புதன்கிழமை

‘துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பில் மாணவர்கள் முறையிட வேண்டும்’

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

“பாடசாலை மாணவர்களுக்கெதிரான துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டுமென” யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (01)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாடசாலைகளில் மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவது தொடர்பான முறைப்பாடுகள் மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப்படுவதுடன் அந்த முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் பிரகாரம், யாழ். மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவினரால் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸாரால் தகுந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான தொந்தரவுகள் தொடர்பில் மாணவர்கள் இரகசியமான முறையில் தமது முறைப்பாடுகளை யாழ்.மாவட்ட செயலகத்தில் முறையிடமுடியும்.

பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் உரிய முறையில் முறைப்பாடுகளை மேற்கொண்டால் தகுந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென” தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .