2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தென்னை மரம் விழுந்து முதியவர் பலி

Freelancer   / 2022 மே 19 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் தற்போது கடுமையான காற்று வீசிவரும் நிலையில், வீட்டின் முன் நின்ற   தென்னைமரம் முறிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வண்ணார்பண்ணை, முருகமூர்த்தி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80 ) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளாா.

அவர் தனது வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்தபோது அவர் மீது தென்னை மரம் அடியோடு சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X