Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். குகன்
தென்மராட்சிப் பகுதியில் தற்போது பரவிவரும் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரிகள், இது குறித்து, பொதுமக்கள் தனிநபர் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
டெங்குத் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, மக்கள் தமது குடியிருப்புகள், காணிகளைத் துப்புரவு செய்யும்போது, அவற்றில் காணப்படும் உண்ணிகள், ஆடைகளில் ஒட்டியிருந்து கடிக்கின்றமையால், இந்தக் காய்ச்சல் ஏற்படுகின்றது.
எனவே, துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவோர், பணிகள் நிறைவடைந்த பின்னர், தாம் அணிந்துள்ள ஆடைகளைக் களைந்து கழுவுமாறும் நன்கு குளித்தப் பின்னர், தோய்த்து உலர்ந்த ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டுமென்றும், சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வாரத்தில் மாத்திரம், 15 பேர் வரையில், உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர், வரணி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025