2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தேசியக் கொடியைக் கழற்றியவர் கைது

Yuganthini   / 2017 ஜூலை 26 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா மாவட்ட செயலகக் கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியைக் கழற்ற முற்பட்ட சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட செயலகத்தின் கொடிக் கம்பத்தில், கீழ் இறக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருந்த, தேசியக் கொடியை மாவட்ட செயலகத்துக்கு வந்த நபர்  ஒருவர்,  கழற்ற முற்பட்டு, அதை அவமதித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதை அவதானித்த மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், இது தொடர்பில் அரச அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராவைப் பரிசோதித்த போது, தேசியக் கொடியை நபரொருவர் அவமதித்தமை பதிவாகியிருந்தது.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில், வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.ரோஹண புஸ்பகுமார, வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த வவுனியா பொலிஸார், வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரொருவரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர், கார் ஒன்றில் மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்து, குறித்த செயலைச் செய்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை, பொலிஸார்தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வவுனியா மாவட்ட செயலக வளாகத்தினுள், வெளியாரின் வாகனங்கள் செய்வது,இன்று (26) முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனால் பொதுமக்கள், சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X