2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவர்கள் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூலை 15 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், க. அகரன்

ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில், தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

ஊர்காவற்றுறையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர் கனகசுந்தரம் ஜெயக்குமாரும் யாழ்ப்பாணத்தில், விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் அகஸ்தீன் மக்டொனால்ட் (வயது - 58) என்பருமே, இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

ஊர்காவற்றுறையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவுத் தெரிவித்து, நேற்று (14) மாலை, வீடுகளுக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கனகசுந்தரம் ஜெயக்குமார், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, மயங்கி விழுந்துள்ளார்.

இவ்வாறு மயங்கி விழுந்தவரை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு, மாரடைப்பே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் அகஸ்தீன் மக்டொனால்ட், இன்று (15) காலை, தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே, அவரது வீட்டில் வைத்து, மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X