2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’தேர்தல் விதிமுறைகளை மீறி முன்னாள் எம்.பிகளின் படங்கள் காட்சி’

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தேர்தல் விதிமுறைகளை மீறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்கள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளனவெனத் தெரிவித்த யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகராஜா அரவிந்தன், அது தொடர்பில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியறுத்தினார்.

யாழில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில், இன்று (16) நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலப் பகுதியில் கம்பரெலிய உள்ளிட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை மக்களிடம் கையளிக்கும் போது, தமது படங்களைக் காட்சிப்படுத்திய பாதாகைகளை அவ்விடங்களில் நாட்டி இருந்தார்களெனவும் அவை தற்போதும் அப்பகுதிகளில் உள்ளனவெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X