2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தொண்டராசிரியர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன் 

வடமாகாண தொண்டராசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (10) முற்பகல் முதல் அவர்கள் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வருட ஆரம்பத்தில், வடமாகாண தொண்டராசிரியர்கள் 1044 பேருக்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று அவர்களில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி 182 பேருக்கு அலரி மாளிகையில் வைத்தும், யூலை மாதம் 22 ஆம் திகதி 457 பேருக்கு யாழ்.இந்துக்கல்லூரியில் வைத்தும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நியமனம் வழங்கப்படாதோரில் 288 தொண்டராசிரியர்களே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்;பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .