Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
யாழ். நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை, நாளை (08) முதல் திறப்பதற்கு அனுமதி வழங்குவதாக, யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 26ஆம் திகதி முதல் யாழ். நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதாகவும், அந்த வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தப்படனரெனவும் கூறினார்.
இந்நிலையில், கடந்த 14 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில், தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை, நாளைக் காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
நேற்று (06), அவசரமாக கூடிய யாழ். மாவட்டக் கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தின் போதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், தற்போது பண்டிகை காலம் என்பதால், மக்கள் வழமை போன்று ஒன்றுகூடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago