2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தேசிய நீர்வழங்கல் சபையின் தலைவருக்கு பிடியாணை

Gavitha   / 2016 மார்ச் 17 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்தும் இதுவரையில் ஆஜராக தேசிய நீர்வழங்கல் சபையின் தலைவருக்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் இன்று வியாழக்கிழமை (17) பிடியாணை பிறப்பித்தார்.

யாழ்.மாவட்ட சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் மின்சார சபை வளாகத்தில் வெறுமனவே நிலத்தில் விடப்பட்ட கழிவு ஒயிலால் அப்பிரதேச கிணறுகளுக்கு கழிவு ஒயில் பரவியமைக்காக தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய பிரதேசங்களின் பொதுச்சுகாதார பரிசோதகர் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சாவகச்சேரி, பருத்தித்துறை, நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் பொய்யான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என நீதவான் கூறினார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் என்ன செய்தீர்கள்? என்ன விடயங்களை ஆராய்ந்தீர்கள், எதிர்காலத்தில் என்ன செய்யவுள்ளீர்கள் என்பது தொடர்பில் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, எதிர்வரும் 14 நாட்களுக்குள் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டார். மேலும், நீரைக் குடிக்கலாமா இல்லையா என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அதுவரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கலை தேசிய நீர்வழங்கல் சபை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X