2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

திணைக்களங்கள், மன்றங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள், திணைக்களங்களின் அதிகாரிகளுக்கும் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (30) நடைபெற்றது.

உள்ளூராட்சி மன்றங்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் 2016ஆம் ஆண்டு செய்ய வேண்டிய செயற்பாடுகள், கடந்த காலத்தைவிட எதிர்காலத்தில் வினைத்திறனாகச் செயற்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இதில், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X