2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

திருநெல்வேலியில் நகை, பணம் திருட்டு: ஒருவர் கைது

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

திருநெல்வேலி ஆடியபாதம் கிழக்கு வீதியில் உள்ள வீட்டில் புகுந்த திருடர்கள், 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகை, மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளதாக தெரிவித்த கோப்பாய் பொலிஸார் , சந்தேக நபரொருவரை கைதுசெய்துள்ளதாகவும் கூறினர்.

இந்த கொள்ளைச் சம்பவம்  திங்கட்கிழமை (02) அதிகாலை 2:45 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர் இயற்கை கடன் கழிப்பதற்கு கதவினை திறந்து வெளியில் சென்ற நேரம் பார்த்து உள் நுழைந்த திருடர்கள், இந்த கொள்யைில் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X