2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

திருமண வீட்டில் திருடியர் கைது

Menaka Mookandi   / 2016 ஜூலை 04 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள், கடந்த ஜூன் மாதம் நுழைந்து, நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிச்சென்ற சம்பவம் தொடர்பில், சுதுமலை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை, இன்று திங்கட்கிழமை (04) கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டில் திருமணம் நடைபெற்ற தினத்தன்று, அங்கிருந்த 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 6½ பவுண் நகைகள் மற்றும் இலங்கைப் பெறுமதியில் 80 ஆயிரம் ரூபாய் வெளிநாட்டு நாணயத்தாள்கள் என்பன திருடப்பட்டன.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருமண வீட்டுக்கு வந்து தங்கியிருந்த நபரே இந்த திருட்டை மேற்கொண்டமை தெரியவந்தது. இதனையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டார் என பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X