2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் ஆகியவற்றை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சனிக்கிழமை(09) காலை  திறந்து வைத்தார்.

பாடசாலையின் அதிபர் செ.செல்வரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினராக வடாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, கௌரவ விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியான், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயிஸின் இணைப்பாளர் எம்.சாதீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X