2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா எதிர்வரும் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வானது உரும்பிராய் கற்பகவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெறும்.

இதன்போது, ஆலய பரிபாலன சபைத் தலைவர், வங்கியாளர் சி.நந்தகுமார் தலைமை வகிப்பார். இலண்டனைச் சேர்ந்த கு.விவேகானந்தன் தம்பதியினர் மண்டபத்தினைத் திறந்து வைப்பார்.

இதில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாதன் ஆளுநரின் செயலர் இ.இளங்கோவன், கோப்பாய் பிரதேச செயலாளர் ம.பிரதீபன், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நல்லை ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கற்பக விநாயகர் ஆலயப் பிரதம குரு வண தியாக கிருஷ்ணமூர்த்தி குருக்கள், யாழ்.சின்மயமிஷன் முதல்வர் வண ஜாக்கிரத் சைதன்யர் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X