2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தீவகத்திலுள்ள பாழடைந்த வீடுகளை அகற்ற உத்தரவு

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'தீவகப் பகுதியிலுள்ள பாழடைந்த வீடுகள், காடுகள் போன்று வளர்ந்துள்ள பற்றைகளை அகற்றுவதற்கு பிரதேச சபைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏம்.எம்.எம்.றியால், வெள்ளிக்கிழமை (18) உத்தரவு பிறப்பித்தார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தீவகத்தில் கடந்த 20 வருடங்களாக பராமரிப்பற்று இருக்கும் பாழடைந்த வீடுகள் மற்றும் பற்றைகள் ஆகியவற்றிலே சட்டவிரோதச் செயற்பாடுகள் நடைபெறுகின்றன என்றும், அவ்வாறே இந்தக் கொலையும் இடம்பெற்றுள்ளது என்பதை குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்தே, ஊர்காவற்றுறை, வேலணை பிரதேச சபைகளுக்கு நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X