2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

தாவடியில் டெங்கு அபாயம்:9 பேருக்கு அபராதம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தாவடி, வன்னியசிங்கம் பகுதி மற்றும் பத்தானை பகுதிகளில், டெங்கு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த 9 பேருக்கு, தலா மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்த மல்லாகம் நீதிவான் ரீ.கருணாகரன், வீட்டு உரிமையாளர்களையும் கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தார்.

இனிவரும் காலங்களில், டெங்கு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு, அதிகூடிய அபராதத் தொகையாக, 10ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும் எனவும், நீதவான் கூறினார்.

யாழ். மாநகரசபைக்கு அடுத்தபடியாக, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியிலேயே, டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், சுகாதார வைத்திய அதிகாரிகளும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர் நடவடிக்கையாக, அறிவுறுத்தல் விடுக்கப்பட்டும் இதுவரை ஒழுங்கான முறையில் சுற்றுசூழலை வைத்திருக்கத் தவறிய வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராகவே, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினம், இனுவில் பொதுச்சுகாதார பரிசோதகரினால் தாக்கல் செய்யப்பட்ட 9 வழக்குகளும், தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் மேற்கண்ட அபராதத்தை விதித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X