2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நகை வாங்குவது போன்று பாசாங்கு செய்து நகை திருட்டு

Freelancer   / 2022 நவம்பர் 04 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்றைய தினம் நகை வாங்குவது போன்று பாசாங்கு செய்து நகையை திருடிய திருடனை ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். 

குறித்த நபர் கடையில் இருந்த நகைகளை பார்வையிட்டுள்ளனர். இதன் போது ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான சங்கிலி ஒன்றினை திருடி தனது உடைமையில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து சாதுரியமாக நகை வாங்காது வெளியேறி சென்றுள்ளார். 

குறித்த நபர் வெளியேறி சில நிமிடங்களில் சங்கிலி திருடப்பட்ட விடயம் அறிந்த நகைக்கடை உரிமையாளர் தனது கடையில் வேலை செய்யும் இளைஞனை அந்நபரை அடையாளம் கண்டு பின் தொடருமாறு அறிவுறுத்தி விட்டு , சாவகச்சேரி பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார். 

கடையில் நகையை திருடிய நபர் கடையில் இருந்து வெளியேறி , வவுனியா செல்லும் பேருந்தில் ஏறி பயணித்துக்கொண்டிருந்த வேளை , அந்நபரை பின் தொடர்ந்த இளைஞனின் தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த பேருந்தினை வீதியில் வழிமறித்து நகையை திருடியவரை மடக்கி பிடித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X