2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நடத்துனரை தாக்கி விட்டு 50,000 ரூபாய் பணம் கொள்ளை

Freelancer   / 2022 ஜூன் 19 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் நடத்துனர் தாக்கி 50,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆவரங்கால் பகுதியில் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர், ஆவரங்கால் பகுதியில் இறங்க முற்பட்ட பொழுது நடத்துனரை தாக்கி, கையிலிருந்த பணத்தை அபகரித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளார். 

இதன் போது தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான பருத்தித்துறை சக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நடத்துனர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பணத்தினை கொள்ளையடித்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சாரதி சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

எனினும் பொலிஸார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சக பயணிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து புத்தூர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கினர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .