2025 ஜூலை 23, புதன்கிழமை

நந்திக்கடலுக்கு தடுப்பணையுடன் கூடிய கதவு

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, நந்திக்கடலில் தேங்கும் உபரி நீரை உரிய நேரத்தில் கடலுக்குள் விடும் நோக்குடன் நந்திக்கடல் பகுதியில் தடுப்பணையுடன் கூடிய உபரி நீர் வெளியேற்றும் கதவுகள் அமைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நந்திக்கடல் பகுதியானது கடலுடன் இணைக்கும் பிரதேசத்தில் மண் அணையொன்று காணப்படுகின்றது. இது இயற்கையாகவே உருவாகிய மண் அணை ஆகும். மழை காலங்களில் நந்திக்கடலில் நீர் அதிகரிக்கும் போது, அந்த மண் அணையானது வெட்டிவிடப்பட்டு நீர் கடலுக்குச் செல்ல விடப்படும். இது வழமையாக டிசம்பர் மாதத்தின் 15ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ளப்படுவது வழமை.

இம்முறை முன்னதாக பெய்த மழையால் நந்திக்கடலில் அதிகளவான நீர் தேங்கி, அருகிலிருந்த வயல் நிலங்களின் நெற்பயிர்கள் அழிவடைந்தன. இதனால் நீர் தேங்கும் நேரத்தில் உபரி நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில், தடுப்பு அணையுடன் கதவுகள் போடுவதற்கு மாவட்ட கமநல சேவைகள் நிலைத்தால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு 40 மில்லியன் ரூபாய் செலவாகும் என கமநல நிலையத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு, மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி கிடைக்கப்பெற்றவுடன், இந்தத் திட்டம் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .