2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘நயினாதீவு உற்சவத்துக்கான போக்குவரத்து சேவைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன’

Editorial   / 2018 ஜூன் 01 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

“நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவத்துக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக” யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்துக்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று  (01)  யாழ்.மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் நயினாதீவு ஆலய நிர்வாகத்தினர், பிரதேச செயலாளர்கள், கடற்படையினர், பொலிஸார் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினர், படகு உரிமையாளர்கள், சுகாதார திணைக்களத்தினர் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் நிறைவில் மாவட்டச் செயலர் கருத்து தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 14 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரை காலை 5 மணியளவில் இருந்து மாலை 7.30 வரை பஸ்கள் யாழ்ப்பாணத்துக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையிலீடுபடும்.

காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை குறிகட்டுவானில் இருந்து படகுகள் சேவையில் ஈடுபடும்.

படகுகள் சரியான பராமரிப்புக்குட்படுத்துவதற்கான பரிசீலணைகளை துறைமுக அதிகார சபையினர் மேற்கொள்வார்கள்.

படகுகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக உயிர்காப்பு அங்கிகள் அணிய வேண்டும். அதேவேளை, விசேட திருவிழா நாட்களில் அதிகமான பஸ் சேவைகள் மற்றும் படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையால், படகுக் கட்டணத்தை அதிகரிக்குமாறு படகுச் சேவை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விலை நிர்ணய கட்டுப்பாடு சபையுடனான கலந்துரையாடலின் பின்னர் படகுக் கட்டணம் தொடர்பாக அறிவிக்கப்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .