2025 மே 14, புதன்கிழமை

நல்லாட்சி அரசாங்கத்தில் ‘அரசியல் தீர்வு கிட்டாது’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஜூலை 16 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தில், அரசியல் தீர்வு வரும் என்று நான் நம்பவில்லையென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படாமல் இந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையாதெனவும் தமிழ் மக்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்காதெனவும் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விடயம் தொடர்பில், தாங்கள் மென்மேலும் முயற்சித்து வருவோமாக இருந்தால், தாம் பெரும்பான்மை மக்களிடம் இருந்து ஓரங்கட்டி விடுவோம் என்ற உள்நோக்கத்துடனேயே, நல்லாட்சி அரசாங்கம் குறித்த விடயத்தில் ஆர்வம் காட்டவில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

தற்போது குறித்த இரு தேசியக் கட்சிகளும் 2020ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கின்ற, தமது கட்சிகளை வளர்க்கின்ற நோக்கத்திலேயே ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கத்திடம் இருந்து அரசியல் தீர்வு கிடைக்குமென்று நான் நம்பவில்லையென, அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .