Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆர்.மகேஸ்வரி / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகிழக்கு மாகாணங்களின் மக்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் “நல்லிணக்க தொலைக்காட்சி” சேவை ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக தனியான அலைவரிசை தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இன்று (20) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த புதிய தொலைக்காட்சிக்கு தேவையான உபகரணங்கள் தற்போது கொள்வனவு செய்யவுள்ளதாகவும், கலையகம் அமைப்பதற்காக யாழ் மாவட்ட செயலாளர் ஊடாக யாழ்-மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சொந்தமான 100 பேர்ச்சஸ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் இரண்டாவது தொலைக்காட்சி சேவை கடந்த 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இதில் அதிகமாக விளையாட்டு நிகழ்வுகள் ஒளிபரப்பாவதால், வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்காக தனியான தொலைக்காட்சி சேவை அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்துக்காக இவ்வாறான தொலைக்காட்சி சேவை ஒன்றும் அவசியம் என்றும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago