2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் சூட்டுச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சரண்

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 25 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்இ யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று (25) காலை சரணடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (22) நல்லூர் தெற்கு வீதியில் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து சூட்டுச்சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது நீதிபதியின் மெய்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்திருந்தார்.

இச்சம்பவத்தையடுத்து இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதேவேளை பிரதான சந்தேகநபர் தேடப்பட்டுவந்தார். இந்நிலையில் அவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X