2025 ஜூலை 23, புதன்கிழமை

​ நல்லூர் துப்பாக்கி சூடு : சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றில்; நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்ததோடு, மற்றுமொரு உத்தியோகத்தர் காயமடைந்திருந்தார்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சிவராசா ஜெயந்தன் என்பவர் கடந்த யூலை 25ஆம் திகதி யாழ்.பொலிஸ்  நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், நீதிபதி இளஞ்செழியனின் வாகன சாரதி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ்  உத்தியோகத்தர் மற்றும் சம்பவத்தின் போது அங்கு நின்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் ஆகியோர் சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .