Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 20 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தில் உக்காத கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஈ.பி.டி.பி உறுப்பினர்களிடையே கடும் தர்க்கம் ஏற்பட்டது. இதனால், சபையில் அமைதியின்மை நிலவியது.
நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டம், தவிசாளர் மயூரன் தலைமையில் , இன்று (20) நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் - அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தில் உக்காத கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
விவாதத்தின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் இடம் பெற்றதன் காரணமாக சபையில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் செ.சிவலோசன் குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றும்போது, குறித்த மயானத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்திலேயே, உக்கக் கூடிய கழிவுகளை கொட்டி, மயான பகுதியை உயர்த்தும் முகமாகவே, சபையால் உக்கக் கூடிய கழிவுகள் கொட்டப்பட்டது என்றார்.
எனினும், நல்லூர் பிரதேச சபையை சேர்ந்த சில கட்சிகளின் உறுப்பினர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அந்த இடத்துக்குச் சென்று, மக்களை குழப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்த அவர், கடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் நல்லூர் பிரதேச சபையினரால் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
முன்னைய ஆட்சிக் காலத்தில், அரியாலையில் நாய் சரணாலயம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில். அந்த நாய் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி கதைக்காத நபர்கள், தற்பொழுது மக்களை தூண்டிவிட்டு அரசியல் செய்ய முனைகிறார்கள் என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர், தாம் அவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டில் ஈடுபடுவது இல்லை எனவும் ஒரு சில கட்சிகளின் உறுப்பினர்கள் அவ்வாறு இருந்தாலும் தாங்கள் அவ்வாறு அரசியல் செய்யவில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago