2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக நடமாடும் சேவை

Gavitha   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை வடமாகாண மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை, நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில், நடமாடும் சேவையொன்று இடம்பெறவுள்ளது என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (25) தெரிவிக்கையில்,

'வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) காலை 10.00 மணிக்கு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நடமாடும் சேவையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் பங்கு பெறுவதுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால்; பொதுமக்களுக்கான சேவைகளும் வழங்கப்படவுள்ளன.

சர்வதேச தேவைகளுக்காக ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதற்கான தேவைகளையுடைய பொதுமக்களுக்கான ஆலோசனைகளும் வழிகாட்டல், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் பிறப்பு, விவாகம் மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல், கடவுச்சீட்டு சம்பந்தமான வழிகாட்டல்கள், பல்வேறு கொன்சியுலர் அலுவல்கள், இரட்டை பிரஜாவுரிமை மற்றும் குடியுரிமை பெறுதலுக்குரிய நடவடிக்கைகள் ஆகிய சேவைகள் இடம்பெறவுள்ளன' என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X