2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நல்லூரில் போராட்டங்களுக்கு தடை

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்   

நல்லூர் ஆலய சூழலில், போராட்டங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு, முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அறிவிப்புப் பலகையொன்று வைக்கப்பட்டுள்ளது.  

யாழில் இடம்பெறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலானவை, நல்லூர் ஆலய சூழலிலேயே இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை வெளியிடக்கோரி, வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்து, நேற்று நல்லூர் ஆலய சூழலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   

இந்நிலையிலேயே, ஆலய சூழலில் போராட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X