2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

நாமலிடம் மகஜர் கையளிப்பு

Niroshini   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரி, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம்,   தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு, நேற்று (27) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை  தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்கள், அரசியல் கைதிகளாக இருந்து அண்மையில் விடுதலையானவர்கள் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போதே, அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரி, அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .