2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நாய்கள் சரணாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 11:40 - 1     - {{hitsCtrl.values.hits}}

வீதிகளில் கட்டாக்காலி நாய்களாக திரியும் நாய்களை பராமரிக்கும் நோக்குடன் நாய்கள் சரணாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.

பளை இயக்கச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி நாய்கள் பராமரிப்பு நிலையம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் திறந்து வைக்கப்படவுள்ளது.

செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெறும் அந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், பளை பிரதேச செயலர் திருமதி.ப.ஜெயராணி,  பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன் மற்றும் சரணாலயம் நிலத்தினை அன்பளிப்பு செய்த செல்வி. பே.ரோகினி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்


  Comments - 1

  • க.செந.தில்நேசன் Sunday, 21 April 2019 03:46 AM

    நல்ல ஓர் முயற்சி வாழ்த்துகள், நமது பிரதேசங்களில் அதிகரித்துவரும் விபத்துகளுக்கு நாய்களும் காரணமாக உள்ளன. இந்நிலையில் நாய்கள் வீதிக்கு வராமல் தடுக்க இது நல்ல வழியாக அமையும். இது போல வீதி ஓரங்களில் கால்நடைகளை கட்டுவதற்கும் தடை விதிக்க வேண்டும். நன்றி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X