Editorial / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா
“மாநகர சபைக் கட்டடத்துக்கென ஒதுக்கிய நிதி கிடைக்கும் பட்சத்தில் கட்டடம் அமைப்பதுக்கான பூர்வாங்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநகர சபை தயாராக உள்ளதாக” யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று (23) தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகர சபை கட்டடத்தை மீண்டும் பழைய இடத்தில் கட்டுவதுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம். நவீன வசதிகளுடன், தமிழ் மக்களின் பாரம்பரியம், கலாசார பண்புகள் மாறாது கட்டுவதுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மாநகர சபைக் கட்டடத்தை கட்டுவதுக்கு நகர அபிவிருத்தி அமைச்சினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி தருவதாக உறுதியளித்திருந்தனர். கட்டடத்தின் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதுக்கு 1800 மில்லியன் ரூபாய் தேவை என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சு 1000 மில்லியன் ரூபாய் நிதியும், வடமாகாண சபை 500 மில்லியன் ரூபாயும், ஏனைய 300 மில்லியன் ரூபாயை மாநகர சபையும் பொறுப்பேற்குமென்ற வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்தொதுக்கப்பட்ட நிதிகளை, நகர அபிவிருத்தி அமைச்சும், வடமாகாண சபையும் வழங்குமிடத்து, கட்டடத்தை 2 வருடங்களில் நிறைவு செய்யலாம்.
இருப்பினும் இடையில் ஏற்பட்ட அரசியல் சலசலப்புக் காரணமாக, மாநகர சபை கட்டட வேலைத்திட்டங்கள் கிடப்பில் இருப்பதாக பொறுப்பேற்ற பின் அறிந்துள்ளேன்.
கட்டடத்துக்கான பூர்வாங்க வடிவமைப்பைச் செய்த பின்னர் நகர அபிவிருத்திச் சபை கூறிய உத்தரவாதத்தை வழங்கும் பட்சத்தில், மாநகர சபைக் கட்டடத்துக்கான ஆரம்ப பணிகளை ஆரம்பிக்க முடியும். நகர அபிவிருத்திச் சபை உத்தரவாதத்துக்கு அமைவாக மாநகர சபைக் கட்டடத்துக்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படுமென்றும்” அவர் மேலும் தெரிவித்தார்.
6 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
3 hours ago