Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்ரமணியம் பாஸ்கரன், க. அகரன்
“கடந்த சில மாதங்களாக வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையால், வட மாகாணத்துக்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச்செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டுமென்று வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“அந்தவகையில் தற்பொழுது காணப்படுகின்ற இவ் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளை முதலமைச்சர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து, நேர்த்தியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லவேண்டும், குறிப்பாக விவசாய அமைச்சை முதலமைச்சர் தன்னகத்தே வைத்திருக்கின்றார். தற்பொழுது அவ்வமைச்சில் பல வேலைத் திட்டங்கள் தேங்கிக் கிடப்பதாக அறியமுடிகின்றது. ஆகவே சம்பந்தப்பட்ட அமைச்சர்களை உரிய முறையில் நியமித்து மிகவிரைவாக அவ்வேலைத் திட்டங்களை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தமட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் எனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு ரூபா நிதி கூட திரும்பிச் செல்லவில்லை என்பதனை எமது மக்கள் நன்கு அறிவீர்கள். குறிப்பாக இவ்வெற்றிக்கு முக்கிய காரணம், முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை அடிமட்டத்துக்கு இறங்கி அதிலிருக்கிற சாதக, பாதக விடயங்களையும் இருக்கின்ற பிரச்சனைகளையும் கண்ணுற்று அதனை தீர்ப்பதன் ஊடாகவே முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை சரியாகவும் விரைவாகவும் பிரியோசனமுள்ளதாகவும் செய்துமுடிக்க கூடியதாக இருந்தது.
திட்டங்களை வகுப்பது மட்டுமல்லாது அதனை நடைமுறைப்படுத்துகின்ற போது அடிமட்டத்திற்கு இறங்கி வேலை செய்வதில்தான் அதன் வெற்றி தங்கியிருக்கின்றது, தற்பொழுது பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் முதலமைச்சர் அவர்கள் அவரது வயது உடல்நிலை காரணமாக அடிமட்ட கிராமங்களுக்கு இறங்கி செயற்படுவது என்பது முடியாத காரியம், ஆகவே மிக விரைவாக உரிய அமைச்சர்களை நியமித்து மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை சரியாக பயன்படுத்துவதன் மூலமே எமது மக்களின் வாழ்வாதரத்தினை ஓரளவுக்கேனும் உயர்த்த முடியும், தூரநோக்கோடு சிந்தித்து முதலமைச்சர் அவர்கள் செயற்படுவார்களாயின் அதனை முழுமனதோடு நான் வரவேற்கின்றேன்.
மேலும் முதலமைச்சராகிய தங்களைச் சுற்றி ஒரு குள்ளநரிக்கூட்டம் சுயநல அரசியல் இலாபத்துக்காக வட்டமிட்டுக் கொண்டிருகின்றார்கள், அவர்களின் சொல்கேட்டு நீங்கள் நடபீர்களேனில் இன்னும் எமது மாகாணம் பல பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும், அத்தோடு ஒரு விடயத்தை சரியாக சிந்தித்து செயர்ப்படுத்த கூடிய அறிவு,ஆற்றல், வல்லமை உடையவர் தாங்கள், அந்தவகையில் எவரதும் சுயநல அரசியல் இலாபத்துக்கும் இடம்கொடுக்காது சரியான விடயங்களை நேர்த்தியாக முன்னெடுப்பீர்களென நம்புவதாக” மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .