2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

‘நினைவேந்தல் நிகழ்வு என்பது மரணச்சடங்கு போன்றது’

எம். றொசாந்த்   / 2018 மே 31 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்குச் செல்வது போன்றது, அங்கே மாலை மரியாதை அளித்து மேள தாளத்துடன் அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்கக் கூடாது” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்று (31) கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.

அதன்போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, “முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திரும்பத் தருமாறு” கோரி இருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கையிலையே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நினைவேந்தல் என்பது மரண வீட்டுக்குச் செல்வது போன்றது. அங்கே மேள தாளத்துடன், மாலை போட்டு அழைத்துச் செல்லமாட்டார்கள். அதை நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது.

நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற இடத்தில் அமைக்கப்பட்ட பந்தல்கள், அந்த இடத்தில் வெறும் காலுடன் நடக்க கூடியவாறு அதனை துப்பரவு செய்தமை, குடிக்க நீர் வழங்கியமை போன்ற செலவுகள் மாகாண சபை உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் செய்யப்பட்டதே” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .