2025 மே 10, சனிக்கிழமை

‘நிபுணர்களைச் சிக்கவைக்கும் முத​லைகள் பற்றி அறிவோம்’

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

 

நிபுணர்களைக்கூட தம் வலையில் மாட்டி வைக்க முனையும் முதலாதிக்கம் பெற்ற முதலைகள் பற்றி நாம் அறிந்தே இருக்கின்றோமென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட மண்டைதீவு - அல்லைப்பிட்டி பாலத்தின் திறப்பு விழா, இன்று (20) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் இரு மருங்கிலும் காணப்படுகின்ற வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், மண்டைதீவு பகுதியில், அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு வெளிநாடு, உள்நாட்டிலிருந்து பலரும் தமது திட்ட முன்மொழிவுகளைக் கையளிக்கின்றார்களெனத் தெரிவித்த முதலமைச்சர், இவர்களின் திட்டங்கள், மண்டைதீவு நிலப்பரப்பு முழுவதையும் விழுங்கக்கூடிய வகையிலோ அல்லது இப்பகுதியின் தனித்துவத்தை சீர்குலைக்கக்கூடிய வகையிலோ அல்லது மாகாணத்துக்கு வெளியில் இருப்பவர்கள் இங்கு வந்து பொருளாதார ஆக்கிரமிப்பில் ஈடுபடும் வகையிலோ அமைந்துவிடக்கூடாது என்ற காரணத்தால், அவ்வாறான கோரிக்கைகளை எடுத்த எடுப்பிலேயே நாம் அனுமதித்துவிடாது, அதற்கான நிபுணத்துவக் குழுக்களிடம் கையளித்திருக்கின்றோமெனக் குறிப்பிட்டார்.

அந்தவகையில், அந்த நிபுணர்களைக் கூட, தமது வலையில் மாட்டி வைக்க முனையும் முதலாதிக்கம் பெற்ற முதலைகள் பற்றி நாம் அறிந்தே இருக்கின்றோமென அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X