2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘நியமனம் வழங்குவதற்கு மாகாண அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 நவம்பர் 05 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடமாகாணத்தில் வைத்தியர்கள் வெற்றிடமாக உள்ள வைத்தியசாலைகளில், வைத்தியர்களை நியமிப்பதில் மாகாண அரசாங்கத்துக்கு அதிகாரங்கள் இல்லை. அதனால், மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரத்தின் கீழ் தங்கியிருக்க வேண்டும்” என, வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் நேற்று (04) வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“மத்திய சுகாதார அமைச்சு வைத்தியர்களை நியமிக்கும் போது, வட மாகாணத்தில் எந்தெந்த வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் பற்றாக்குறைகள், எந்தெந்த வைத்தியசாலைகளுக்கு வைத்தியர் வெற்றிடம் உள்ளன என்று, மத்திய சுகாதார அமைச்சுக்கு, வட மாகாண அமைச்சால் அனுப்பி வைக்கின்றோம்.

“இதில், கூடுதலான புள்ளிகளைப் பெற்ற வைத்தியர்கள், உயர் வைத்தியசாலைகளில் இணைகின்றனர். ஏனைய வைத்தியர்கள், பின்தங்கிய வைத்தியசாலைகளில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு, சேவைளைச் செய்கின்றனர்.

“இதில் பலர், அரசியல் செல்வாக்கு, ஏனைய வழிகளிலும் மாற்றலாகிச் செல்கின்றனர். சில வைத்தியர்கள், வேலையைத் தாங்களாக இரத்துச் செய்து விட்டு வெளியேறுகின்றனர். இதனால் பின்தங்கிய சில வைத்தியசாலைகளுக்கு, வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .