Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2022 மே 09 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
இளைஞன் ஒருவரை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர், கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய், செல்வபுரத்தைச் சேர்ந்த இளம் கணவன், மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் இருவரே, நேற்று முன்தினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “சந்தேகநபர்கள் முகநூல் போலிக் கணக்கின் ஊடாக பெண் ஒருவர் போன்று சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞருடன் நட்பாகியுள்ளனர்.
பின்னர் இளைஞனை கோப்பாய்க்கு அழைத்து, தமது வீட்டில் அறையில் பூட்டி வைத்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்ததுடன், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அவற்றை பேஸ்புக்கில் பதிவேற்றப் போவதாக அச்சுறுத்தி, இளைஞனிடம் 2 இலட்சம் ரூபாய் பணத்தை கோரியுள்ளனர். அச்சமடைந்த இளைஞன், வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை கடந்த வாரம் வைப்பிலிட்டுள்ளார்.
இந்நிலையில், மீளவும் இந்த வாரம் இளைஞனிடம் 5 இலட்சம் ரூபாய் கோரியுள்ளனர்.
அதனால் அச்சமடைந்த இளைஞன், கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்திருந்தார். அதனை விசாரித்த பொலிஸார், இளம் தம்பதி உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago