2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘நிறைவான கிராமங்களால் மக்கள் முன்னேற்றமடைவர்’

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

 

நிறைவான கிராமங்களால் தான், கிராமங்களில் வாழும் மக்கள் முன்னேற்றமடைவார்களென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

சாவகச்சேரி பகுதியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்புக் கூறுபவராக இருக்க வேண்டுமெனவும் அந்த வகையில், தான் கடந்த நான்கரை வருடங்களில் 6,597 வேலைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளதாகவும் கூறினார்.

அதனூடாக நான்கு இலட்சம் பயனாளிகளை உருவாக்க முடிந்ததாகத் தெரிவித்த அவர், யாழ். மாவட்டத்தில் உள்ள 435 கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களுக்கான வேலைத்திட்டம் நடைபெற வேண்டும் என்பதே தமது எண்ணமெனவும் அந்த அடிப்படையில், சகல கிராமங்களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில், நிறைவான கிராமம் என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

“முக்கால்வாசி மக்கள் வாழ்வது கிராமங்களில் தான். அதனடிப்படையில் கிராமங்கள் நிறைவான கிராமங்கள் ஆவதால்தான், அதில் வாழும் மக்கள் முன்னேற்றமடைவார்கள். அப்போது தான், அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். இதன் மூலம் குடும்பங்கள் நிறைவானதாக மாறும்” எனவும், அங்கஜன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X