2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’நிலத்தடிநீருக்கு எதிரான செயற்பாட்டை ஆதரிக்க முடியாது’

Princiya Dixci   / 2021 மார்ச் 25 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

நிலத்தடிநீருக்கும் விவசாயத்துக்கும் எதிரான செயற்பாட்டை ஏற்கமுடியாதென்று,  புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் நி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் தொடர்பாக அவர் விடுத்துளலள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுளலளது.

அவ்வறிக்கையில், வவுனியாக்குளத்தில்,   நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் இணைந்து, வவுனியா நகரசபையின் அனுமதியுடன், இரண்டரை ஏக்கர் நிலத்தில் பூங்கா அமைக்கப்பட்டதாகவும்  தற்போது, மேலும் இரண்டு ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு, வேறு கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன் அதனை சம்பந்தப்பட்டோர் அனைவரும் கண்டும்காணாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா நகரின் மத்தியில் அபகரிக்கப்படும் இந்நிலத்தில், உல்லாச ஹோட்டல்கள் நிறுவப்படவுள்ளன எனத் தெரிவித்துள்ள அவர், இந்த ஹோட்டல்களை மையமாக வைத்துக்கொண்டு,  சமூகவிரோதசெயல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, நிலத்தடிநீருக்கும் விவசாயத்துக்கும் எதிர்கால சமூக இருப்புக்கும் ஆப்புவைக்கும் இந்தச் செயற்பாட்டை, சாதாரண மக்களின் வாழ்வில் மண் அள்ளிபோடும் விடயமாகவே பார்ப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து இந்நிலமைகளை அனுமதிப்போமேயானால்,  எதிர்கால இளம் தலைமுறைக்கு சுத்தமான நீர், பயனுள்ள நிலம், சுத்தமான காற்று என்பவற்றை இல்லாமல் செய்து,  இருண்ட பாலைவனச் சுற்றுச்சூழலை கையளிக்க வேண்டிவருமெனவும்,  அவர் கூறியுள்ளார்.

எனவே, வவுனியாக்குளத்துக்குள் மண் நிரவப்பட்டு, பூங்கா அமைக்கப்பட்டதை கண்டித்தும் மேலும் கட்டடங்கள் கட்டுவதற்கு நிலங்கள் அபகரிக்கப்படுவதை கண்டித்தும்,  வெள்ளிக்கிழமை (நாளை), வவுனியா - பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X