2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஜப்பான், சீனாவுக்கு மோடி பயணம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான், சீனாவில் பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். 

முதல்கட்டமாக அவர் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டார். அங்கிருந்து சீனா செல்லும் அவர் ஆகஸ்ட் 31  திகதி ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 15 ஆவது இந்திய, ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்ட் 29, 30 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து டோக்கியோவுக்கு புறப்பட்டார். இந்த மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை, அவர் சந்திக்கிறார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

டோக்கியாவில் இருந்து நாளை பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்கு செல்கிறார். அங்கு ஓகஸ்ட் 31, செப்ரம்பர் 1 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (எஸ்.சி.ஓ) அவர் பங்கேற்கிறார். 

இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடி, பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இந்தோனேசியா ஜனாதிபதி  பிரபோவா, சுபியாண்டோ, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உட்பட 20 இற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .