Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டட பதிவேட்டு அறைக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்களை ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று முன்தினம் (28) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி அதிகாலை, நீதிமன்ற கட்டடத்திற்கு இனம்தெரியாதேரால் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இதன்போது, நீதிமன்றத்தின் அயலில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமெரா மூலம் அவதானிக்கப்பட்டபோது, முகமூடி அணிந்த மூன்று பேர் நீதிமன்ற கட்டத்துக்குள் நுழைந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து, விசாரணை முன்னெடுக்கப்பட்டதில், நீலாவணை பகுதியில் பதுங்கிருந்த அக்கரைப்பற்று கோளால் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 24 வயதுடையவருக்கு ஒன்பது நீதிமன்ற பிடிவிறாந்து உள்ளதுடன், இவர் யாழ். ஆவா குழுவுடன் செயற்பட்டிருந்தாகவும் அவரின் நண்பர்களான 20, 17 வயதுடையவர்கள் ஒன்றினைந்து, இந்தத் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அக்கரைப்பற்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
42 minute ago