Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் கீழ் தளத்தின் ஊடாகப் பாய்ந்து நீதிமன்ற பின் வாயிலால் ஓடித் தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (8) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், கொட்டடி முத்தமிழ் வீதியைச் சேர்ந்த பாலராசா விஜிகாந்த என்ற சந்தேகநபரே இவ்வாறு பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பித்தார்.
கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் உள்ளன.
வழக்குத் தவணைகளுக்கு ஒழுங்காக முன்னிலையாக சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பிடியாணை உத்தரவை நிறைவேற்றிய கோப்பாய் பொலிஸார் சந்தேகநபரை நேற்று (07) கைது செய்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றில் முற்படுத்த சந்தேகநபரை அழைத்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரை நீதிமன்றின் உட்பகுதியில் நிற்கவைத்துவிட்டு, பதிவாளரின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சந்தேகநபர், நீதிமன்றின் பின்புறமாக உள்ள கீழ் தளத்துக்குள் பாய்ந்து வளாகத்துக்கு பின்பக்கத்தால் தப்பித்தார்.
வளாகத்தின் பின் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் நீதிமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கடமையில் இல்லாத நிலையிலே சந்தேகநபர் அந்த வழியாகத் தப்பித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago